/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சமூகநீதி விடுதி அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும்: பார்வர்டு பிளாக் வலியுறுத்தல்
/
சமூகநீதி விடுதி அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும்: பார்வர்டு பிளாக் வலியுறுத்தல்
சமூகநீதி விடுதி அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும்: பார்வர்டு பிளாக் வலியுறுத்தல்
சமூகநீதி விடுதி அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும்: பார்வர்டு பிளாக் வலியுறுத்தல்
ADDED : ஆக 05, 2025 05:23 AM
ராமநாதபுரம் : சீர்மரபினர், கள்ளர், ஆதிதிராவிடர் விடுதிகளின் பெயரை சமூகநீதி விடுதியாக மாற்றும் அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அகில
இந்திய பார்வர்டு பிளாக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தில் அக்கட்சியின் மாணவரணி மாநில செயலாளர் கொம்பையா பாண்டியன் கூறியதாவது:
சுதந்திர போராட்டத்தில் முக்குலத்தோர் சமுதாயம் பெரும் பங்காற்றியுள்ளது. எங்களை சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து சீர்மரபினர் மக்களுக்கான உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. எனவே மீண்டும் டி.என்.டி., என்ற ஒற்றை சான்றிதழ் வழங்கக் கோரி போராடி வருகிறோம்.
இந்நிலையில் தற்போது அரசியல் லாபம், தேர்தலுக்காக ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், கள்ளர்கள் உள்ளிட்ட அரசு மாணவர்கள் விடுதிகளை சமூக நீதி விடுதியாக பெயர் மாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் இவ்விஷயத்தில் கவனம் செலுத்தி சமூகநீதி விடுதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும். பழைய நிலை தொடர வேண்டும்.
இல்லையெனில் வரும் தேர்தலில் தி.மு.க.,விற்கு எதிராக சமுதாய மக்கள் திரும்ப வாய்ப்பு உள்ளது.
மேலும் திருநெல்வேலியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் குறிப்பிட்ட சமூகம் குறித்து தரக்குறைவாக பேசியுள்ளார்.
அதன் பேரில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அவர்களால் தென் தமிழகத்தில் ஜாதி மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக செயல்படும் ஷியாம், கிருஷ்ணசாமி மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.