/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சோலியக்குடி மீனவர்கள் ஸ்டிரைக் வாபஸ்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு
/
சோலியக்குடி மீனவர்கள் ஸ்டிரைக் வாபஸ்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு
சோலியக்குடி மீனவர்கள் ஸ்டிரைக் வாபஸ்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு
சோலியக்குடி மீனவர்கள் ஸ்டிரைக் வாபஸ்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு
ADDED : ஆக 20, 2025 06:46 AM
தொண்டி: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் விசைபடகு பறிமுதல் செய்யபட்டதை கண்டித்து சோலியக்குடி மீனவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். அவர்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, ஸ்டிரைக்கை வாபஸ் பெற்றுள்ளனர்.
தொண்டி அருகே எம்.வி.பட்டினத்தை சேர்ந்தவர் சங்கரன் 60. இவருக்கு சொந்தமான விசைபடகில் ஏழு மீனவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கடலில் தடையை மீறி கரையோரத்தில் மீன் பிடித்ததாக, மணமேல்குடி மீன்வளத்துறை ஆய்வாளர் சென்று விசை படகை பறிமுதல் செய்தனர்.
ஏழு மீனவர்களையும் இனிவரும் காலங்களில் தடையை மீறி மீன்பிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கபடும் என எச்சரித்து அனுப்பிவைத்தனர். அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் தொண்டி அருகே சோலியக்குடி விசைபடகு மீனவர்கள் தடையை மீறி கரையோரத்தில் மீன்பிடிக்க வில்லை.
எனவே படகை விடுவிக்க வேண்டும் என்று மீன்பிடிக்க செல்லாமல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து ராமநாதபுரம் (வடக்கு) மீன்வளத்துறை உதவி இயக்குநர் ராஜேந்திரன், தொண்டி மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாகிர், மீனவளம் மற்றும் மீன்வளத்துறை எஸ்.ஐ. அய்யனார் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.
இனிவரும் காலங்களில் தடையை மீறி மீன்பிடிக்க கூடாது என மீனவர்களிடம் வலியுறுத்த பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மணமேல்குடி மீன்வளத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கபட்டது.
பறிமுதல் செய்யபட்ட படகை மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.