/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாசகர்களின் கவனம் ஈர்த்த புத்தகங்கள் சில....
/
வாசகர்களின் கவனம் ஈர்த்த புத்தகங்கள் சில....
ADDED : பிப் 04, 2024 11:34 PM

* ஆட்சித்தலைவிகள் தமிழகம், கேரளாவில் பணிபுரிகின்ற, அண்மை காலம் வரை பணிபுரிந்த சாதனை ‛பெண் கலெக்டர்கள் 'எப்படி ஐ.ஏ.எஸ்., ஆனார்கள் என்ற அவர்களின் வெற்றிக்கதையே இந்நுால். 15 ஆட்சித்தலைவிகளின் பள்ளி, கல்லுாரி கால படிப்பு அனுபவங்கள், ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயாரான விதம், நேர் முகத்தேர்வில் செயல்பட்ட விதம் குறித்து இந்த புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்: ஜி.வி.ரமேஷ்குமார். பதிப்பகம்: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட். விலை: ரூ.160.----
* நலம் நம் கையில் பாகம் 1 நம் ஆரோக்கியத்தை நாமே காப்பாற்றிக்கொள்ளலாம் எனும் நம்பிக்கையைத்தரும் மருத்துவ பெட்டகம் இது. இதயம் காக்க, சிறுநீரகம் காக்க, புற்று நோய்க்கு ஒரு முற்றுப்புள்ளி, மூட்டு வலிக்கு முடிவு கட்டுவோம். மாரடைப்பு, பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம் போன்ற ஆபத்தான நோய்களை தவிர்க்கும் மருத்துவ ரகசியங்களை விவரித்து உங்கள் நலம் காக்க உதவும் மருத்துவக்கையேடு இது. ஆசிரியர்: கு.கணேசன். பதிப்பகம்: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட். விலை: ரூ.190.--------
* நீர்வழிப்படூஉம்
தமிழகத்தில் இதுவரை இடம் பெற்றுள்ள கதை மாந்தர்களில் தனித்துவமான ஒருவர் எனக் காருமாமாவைச் சொல்ல முடியும். வர விருக்கும் தலைமுறைகளாலும் மறக்க முடியாததாகத் திகழவிருக்கும் காருமாமாவின் மரணத்தோடு நாவல் தொடங்குகிறது. காருமாமா என்ற ஒற்றை மனிதனை மையமாக வைத்தே நாவல் பின்னப்பட்டிருந்தாலும் அவர் சார்ந்த அவர் வாழ்ந்து வந்த குடிநாவிதர் சமூகத்தின் மற்ற எல்லா மனிதர்களின் கதைகளாகவும் விரிவாக சொல்கிறது. ஆசிரியர்: தேவிபாரதிபதிப்பகம்: நற்றினை விலை: ரூ.250. -----------

