ADDED : செப் 28, 2026 05:13 PM
அ நிறம் | அளவு
கமுதி: கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவு கல்லுாரி மாணவர் கிஷன் குமரன் தென் மண்டல அளவிலான பல்கலை இடையிலான செஸ் போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்டார்.
கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவு கல்லுாரி அழகப்பா பல்கலையின் கீழ் செயல்படும் கல்லுாரிகளுக்கு இடையிலான செஸ் போட்டி கடந்த வாரம் நடந்தது. இந்நிலையில் கல்லுாரியின் 3ம் ஆண்டு மாணவர் கிஷன்குமரன் தென் மண்டல அளவிலான பல்கலை இடையிலான செஸ் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து தென்மண்டல போட்டிக்கு தேர்வான மாணவர் கிஷன் குமரனை முதல்வர் சரவணகுமார், கல்லுாரி மேற்பார்வையாளர் அறிவழகன், பேராசிரியர் கஜேந்திர நாயகம், உடற்கல்வி இயக்குனர் சிவராமகிருஷ்ணகுமார் உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் பாராட்டினர்.
