ADDED : செப் 28, 2026 05:13 PM
ராமநாதபுரம்: கடலாடி தாலுகா வாலிநோக்கத்தை சேர்ந்த தொழிலாளி ஜபரூல்லா 41, குவைத் நாட்டில் வேலை பார்க்கிறார். அவரை பல நாட்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை. கண்டு பிடித்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தினர்.
வாலிநோக்கத்தை சேர்ந்த தொழிலாளி ஜபரூல்லா 42. இவரது மனைவி மெகர்நிஷா கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தார். அதில் ஜபரூல்லா 2023ல் குவைத் நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் கூலி வேலை பார்க்கிறார். இந்நிலையில் செப்.,18 ல் மனைவியிடம் பேசினார். அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
அங்குள்ளவர்களும் சரியாக பதிலளிக்கவில்லை. எனவே மத்திய, மாநில அரசுகள் குவைத்தில் சிரமப்படும் ஜபரூல்லாவை பத்திரமாக மீட்டு ஊருக்கு அனுப்பி வைக்க உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.–––––
