/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பசும்பொன் கட்டுப்பாட்டு அறையில் எஸ்.பி., ஆய்வு
/
பசும்பொன் கட்டுப்பாட்டு அறையில் எஸ்.பி., ஆய்வு
ADDED : அக் 30, 2025 03:45 AM

கமுதி: பசும்பொன்னில் உள்ள சிசிடிவி., கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையை எஸ்.பி., சந்தீஷ் ஆய்வு செய்தார்.
கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 118வது ஜெயந்தி, 63ம் ஆண்டு குருபூஜை விழா இன்று நடைபெற உள்ளது.
இதில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், சமுதாய அமைப்பினர், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் மரியாதை செலுத்த உள்ளனர்.
இதையடுத்து பசும்பொன் சுற்றியுள்ள பகுதிகளில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பசும்பொன் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 600க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி., கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில் பசும்பொன்னில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையை எஸ்.பி., சந்தீஷ் நேரில் ஆய்வு செய்தார்.

