/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சேதமடைந்த போலீஸ் ஸ்டேஷன் விபரம் அனுப்ப எஸ்.பி., உத்தரவு
/
சேதமடைந்த போலீஸ் ஸ்டேஷன் விபரம் அனுப்ப எஸ்.பி., உத்தரவு
சேதமடைந்த போலீஸ் ஸ்டேஷன் விபரம் அனுப்ப எஸ்.பி., உத்தரவு
சேதமடைந்த போலீஸ் ஸ்டேஷன் விபரம் அனுப்ப எஸ்.பி., உத்தரவு
ADDED : நவ 13, 2024 11:32 PM
ராமநாதபுரம்; தமிழகத்தில் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கான சேதமடைந்த, அகற்ற வேண்டிய அரசு கட்டடங்கள் குறித்த விபரங்களை சேகரித்து அனுப்புமாறு கடலோர பாதுகாப்பு குழும எஸ்.பி., ரோஹித்நாதன் ராஜகோபால் உத்தரவிட்டுள்ளார்.
இந்திய கடற்கரையில் குஜராத் மாநிலத்திற்கு அடுத்தபடியாக நீளமான கடற்கரையை கொண்டது தமிழகம். கன்னியாகுமாரி முதல் சென்னை வரை 1076 கி.மீ., கொண்டது. இந்தப்பகுதியில் கடலோர பாதுகாப்பு பணியில் ஈடுபட 40 கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் ஸ்டேஷன்கள், ரோந்து படகுகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கடலோர பாதுகாப்பு குழும எஸ்.பி., ரோஹித்நாதன் ராஜகோபால் கூறியிருப்பதாவது: கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் ஸ்டேஷன் கட்டடங்களில் பயன்பாட்டில் இல்லாத கட்டடங்கள், பயன்பாட்டில் உள்ள சேதமடைந்த கட்டடங்கள், கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் உள்ள பிற கட்டடங்கள் குறித்து விபரங்களை அனுப்ப வேண்டும். பராமரிக்க வேண்டிய நிலை, இடிக்கப்படும் நிலையில் உள்ள கட்டடங்கள் குறித்த விபரங்களையும் குறிப்பிட வேண்டும்.
பருவமழை துவங்கியுள்ள நிலையில் கனமழையால் கட்டங்கள் சேதமடையாமல் பாதுகாக்க விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

