/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிராம சாலைகளில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் தனி அலுவலர்கள் நடவடிக்கை தேவை

ADDED : ஆக 11, 2025 03:44 AM
கடலாடி: கடலாடி, திருப்புல்லாணி, மண்டபம் உள்ளிட்ட ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களில் அதிகளவு சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது.
பிரதான சாலையில் இருந்து கிராம சாலைகளுக்கு செல்லக்கூடிய பகுதிகளின் இரு புறங்களிலும் அடர்ந்து வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களால் அப்பகுதியில் பயணிக்க கூடிய டூவீலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு முட்புதர்களால் அடர்ந்துள்ளது.
பொதுமக்கள் கூறிய தாவது: முன்பு ஊராட்சி நிர்வாகங்கள் நடந்த போது சாலையின் இரு புறங்களிலும் சீமைக் கருவேல மரங்கள் வெட்டி சுத்தம் செய்யப்பட்டது.
தற்போது தனி அலுவலர்கள் ஊராட்சியை நிர்வகித்து வரும் நிலையில் போக்குவரத்திற்கு இடையூறாகவும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் போது முள் மரங்கள் உரசுவதால் பயணிகள் சிரமத்தை சந்திக்கின்றனர்.
எனவே ஊராட்சி நிர்வாகத்திற்குரிய தனி அலுவலர்கள் இடையூறு ஏற்படுத்தும் சீமை கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விஷயத்தில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும்.
பெரும்பாலான ஊராட்சிகளில் காட்சி பொருளாக உள்ள கழிப்பறை வளாகங்களை உரிய முறையில் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு தனி அலுவலர்கள் அடங்கிய குழுவை அமைத்தால் பெரும்பாலான ஊராட்சிகளில் பணிகளில் தொய்வு இருக்காது என்றனர்.