/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் ஆய்வு
/
வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் ஆய்வு
ADDED : நவ 16, 2025 11:42 PM
கடலாடி: கடலாடி மற்றும் சாயல்குடி பகுதிகளில் ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் வாக்காளர்களுக்கு கணக்கீடு படிவம் வழங்கி வருவதை கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்தார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான கணக்கீட்டு படிவம் ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கி வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். படிவம் பெற்ற வாக்காளர்கள் விரைவாக பூர்த்தி செய்து ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களிடம் திரும்ப வழங்க வேண்டும்.
படிவம் பூர்த்தி செய்வதில் சந்தேகம் இருந்தால் அலுவலர்களிடம் தெரிந்து வாக்காளர்கள் சரியாக பூர்த்தி செய்ய வேண்டும் என தெரிவித்தார். கடலாடி தாசில்தார் பரமசிவம் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

