/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானை தொகுதியில் வாக்காளர் சிறப்பு திருத்தப்பணி இன்று துவக்கம்
/
திருவாடானை தொகுதியில் வாக்காளர் சிறப்பு திருத்தப்பணி இன்று துவக்கம்
திருவாடானை தொகுதியில் வாக்காளர் சிறப்பு திருத்தப்பணி இன்று துவக்கம்
திருவாடானை தொகுதியில் வாக்காளர் சிறப்பு திருத்தப்பணி இன்று துவக்கம்
ADDED : நவ 04, 2025 03:58 AM
திருவாடானை:  திருவாடானை சட்ட சபை தொகுதியில் இன்று (நவ.4) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் துவங்கு கிறது. கணக்கெடுப்பின் போது வாக்காளர்களிடம் கனிவாக நடந்து பணிகள் செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் கமிஷன் அறிவிப்பின் படி தமிழகம் முழுவதும் சிறப்பு தீவிர திருத்த பணிகள் இன்று (நவ.,4) துவங்கு கிறது. திருவாடானை சட்டசபை தொகுதியில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 520 ஆண்கள், 1 லட்சத்து 52 ஆயிரத்து 106 பெண்கள், 25 திருநங்கைகள் என 3 லட்சத்து 2651 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இது குறித்து வாக்காளர் பதிவு அலுவலர்கள் கூறியதாவது:
இந்திய தேர்தல் கமிஷன் அறிவிப்பின் படி தமிழகம் முழுவதும் சிறப்பு தீவிர திருத்த பணிகள் இன்று முதல் துவங்கியுள்ளது. இதற்கான கணக்கெடுப்பு தொடர்பான பணிகள் மேற்கொள்வது குறித்து ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி ஏற்கனவே  அளிக்கப்பட்டு உள்ளது. பி.எல்.ஓ.,க்கள் வீடு தேடி வருவார்கள்.
வாக்காளரும் பி.எல்.ஓ.,க்களை அழைத்து விபரம் கேட்கலாம். வாக்காளர்களிடம் பி.எல்.ஓ.,க்கள் கனிவாக நடந்து விபரங்களை சேகரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகுதியுள்ள ஒரு வாக்காளர் கூட பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக செயல்பட்டு வருகிறோம் என்றனர்.

