நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் முத்துராமலிங்கத்தேவர் சிந்தனை மன்றம் சார்பில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.
நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் தலைமை வகித்தார். நேதாஜி சுவாமிநாதன், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் மூக்கூரான், பொருளாளர் கோட்டை இளங்கோவன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக சாத்துார் ஸ்ரீ குரு கணேசர், அரியலுார் குணசேகரன் தேவரின் ஆன்மிக தொண்டு குறித்து பேசினர்.
பாண்டியா சிலம்ப கூடம் மாணவர்களின் சிலம்பாட்டம், தேவராட்டம், ஒயிலாட்டம், வாள் வீச்சு உள்ளிட்ட பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடந்தது. பின் அனைவருக்கும் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் செய்தார். பொதுமக்கள், சொற்பொழிவாளர்கள் கலந்து கொண்டனர். வெள்ளைப்பாண்டியன் நன்றி கூறினார்.

