/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பஸ்சில் ஆன்மிக சுற்றுலா: ராமேஸ்வரத்தில் இன்று துவக்கம்
/
பஸ்சில் ஆன்மிக சுற்றுலா: ராமேஸ்வரத்தில் இன்று துவக்கம்
பஸ்சில் ஆன்மிக சுற்றுலா: ராமேஸ்வரத்தில் இன்று துவக்கம்
பஸ்சில் ஆன்மிக சுற்றுலா: ராமேஸ்வரத்தில் இன்று துவக்கம்
ADDED : மார் 04, 2024 11:37 PM

ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இன்று (மார்ச் 5ல்) அரசு பஸ்சில் ரூ.80 கட்டணத்தில் ஆன்மிகம், இன்பச் சுற்றுலா செல்லும் திட்டம் துவங்கப்படுகிறது.
ராமேஸ்வரத்தில் ஆன்மிகம், சுற்றுலா தலங்களுக்கு பக்தர்கள், சுற்றுலா பயணிகள் போதிய பஸ் வசதியின்றி தனியார் வாகனங்களில் கூடுதல் செலவு செய்து சிரமப்படுகின்றனர்.
இதனை தவிர்க்க அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இன்று ராமேஸ்வரத்தில் ஆன்மிகம் மற்றும் சுற்றுலா பஸ் சேவை துவங்குகிறது.
இந்த பஸ் காலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை சனி, ஞாயிறு மட்டும் இயக்கப்படும். ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் திருக்கோயில், அக்னி தீர்த்தம், ராமர் பாதம் கோயில், ராமர் தீர்த்தம், சீதா தீர்த்தம், லட்சுமண தீர்த்தம், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீடு, நினைவகம் ஆகிய 9 இடங்களுக்கு 5 பஸ்கள் இயக்கப்படுகிறது.
ஒருவருக்கு கட்டணம் ரூ. 80 மட்டுமே. பயணிகள் எங்கு வேண்டுமானலும் இறங்கி, அடுத்து வரும் சுற்றுலா பஸ்ஸில் ஏறிச் செல்லலாம். பஸ் ஸ்டாண்டில் இருந்து 12 நிமிடத்திற்கு ஒருமுறை பஸ் இயக்கப்படும். இந்த ஆன்மிகம், இன்பச் சுற்றுலா பஸ் சேவையை சுற்றுலா ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

