
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரை பேர்ல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா நடந்தது. சேர்மன் ஆரிப் புஹாரி ரஹ்மான் தலைமை வகித்தார். செயலாளர் ஹாலித் ஏ.கே.புகாரி முன்னிலை வகித்தார். முதல்வர் ஷாநவாஸ் வரவேற்றார்.
பள்ளி தாளாளர் சரிபா அஜீஸ், இணை தாளாளர் மரியம் ஹபீப், கீழக்கரை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், தாசில்தார் ஜமால் முகம்மது உட்பட பலர் பங்கேற்றனர்.
கராத்தே மாணவர் வயிற்றில் டூவீலரை ஏற்றியும், கைகள் மீது காரை ஏற்றும் சாகச நிகழ்ச்சி மற்றும் சிலம்பம், பிரமிடு, கலை நிகழ்ச்சிகள் நடந்தது. வென்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டது.