
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: -ராமநாதபுரம் சபா நடேசய்யர் தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் இல்ல பயிற்சி அளிக்கப்பட்டது.மாவட்டத்தலைவர் லியோன் தலைமை வகித்தார்.
துளிர் இல்லம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜீவானந்தம் வரவேற்றார். அறிவியல் இயக்க மாவட்ட துணைத்தலைவர்கள் நவநீதகிருஷ்ணன், வின்சென்ட் வீரு, மாவட்ட துணைச்செயலாளர் பரமேஸ்வரன், சபா நடேசய்யர் தொடக்கப்பள்ளி ஆசிரியர் சொர்ண கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
'வாழ்வே அறிவியல்' என்ற தலைப்பில் ஓய்வு தலைமையாசிரியர் மணி, அறிவில் இயக்க மாநில செயலார் பாலகிருஷ்ணன் துளிர் இல்லமும் செயல்பாடுகளும்' என்ற தலைப்பில் பேசினர்.
துளிர் இல்லம் சாகுல்மீரா நன்றி கூறினார்.

