/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கை கடற்படை கெடுபிடி ராமேஸ்வரம் மீனவர்கள் அச்சம்
/
இலங்கை கடற்படை கெடுபிடி ராமேஸ்வரம் மீனவர்கள் அச்சம்
இலங்கை கடற்படை கெடுபிடி ராமேஸ்வரம் மீனவர்கள் அச்சம்
இலங்கை கடற்படை கெடுபிடி ராமேஸ்வரம் மீனவர்கள் அச்சம்
ADDED : ஆக 28, 2025 02:05 AM
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த, 61 மீனவர்களை கைது செய்து, 7 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். இலங்கை கடற்படையினரின் இந்த கெடுபிடியால் மீனவர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
இலங்கை கடற்படையினரை கண்டித்து, ராமேஸ்வரம் மீனவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு, 12 நாட்களுக்கு பின் ஆக., 23ல் மீன்பிடிக்க சென்றனர். இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தலுக்கு பயந்து மீன்பிடித்து, கரை திரும்பிய மீனவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை.
நேற்று, 50 சதவீதம் அளவில், 310 படகுகளில் மீனவர்கள் மட்டுமே மீன்பிடிக்க சென்றனர்.
மீதமுள்ள, 300 படகுகளை கரையில் நிறுத்தி, மற்ற மீனவர்கள் வீடுகளில் முடங்கினர். இதனால் மீனவர்கள் அன்றாட செலவுக்கு பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.