/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இ.சி.ஆர். ரோட்டில் 20 மரங்களில் ஆணிகளை அகற்றிய எஸ்.எஸ்.ஐ.,
/
இ.சி.ஆர். ரோட்டில் 20 மரங்களில் ஆணிகளை அகற்றிய எஸ்.எஸ்.ஐ.,
இ.சி.ஆர். ரோட்டில் 20 மரங்களில் ஆணிகளை அகற்றிய எஸ்.எஸ்.ஐ.,
இ.சி.ஆர். ரோட்டில் 20 மரங்களில் ஆணிகளை அகற்றிய எஸ்.எஸ்.ஐ.,
ADDED : அக் 18, 2025 03:43 AM

திருவாடானை: தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் 20 மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகளை ராமநாதபுரம் பொருளாதார குற்றப் பிரிவு போலீஸ் எஸ்.எஸ்.ஐ., சுபாஷ் சீனி வாசன் அகற்றினார்.
கிழக்கு கடற்கரை சாலை ஓரங்களில் உள்ள மரங்களில் தனியார் நிறு வனங்கள் தங்களது விளம்பரத்திற்காக ஆணிகளை அடித்து விளம்பர போர்டு களை பதிக்கின்றனர். ஆணி அடிப்பதால் நாளடைவில் மரங்கள் காய்ந்து பட்டுப்போக அதிக வாய்ப்பு உள்ளது. இது குறித்து தினமலர் நாளிதழில் அடிக்கடி செய்தி வெளியாகிறது.
இந்நிலையில் ராமநாத புரம் பொருளாதார குற்றப் பிரிவு போலீஸ் எஸ்.எஸ்.ஐ. சுபாஷ் சீனிவாசன் மரங்களில் உள்ள ஆணிகளை அகற்றி காயத்தை போக்க மஞ்சள் தடவுகிறார்.
நேற்று காலை ராமநாத புரத்தில் இருந்து டூவீலரில் புறப்பட்ட அவர் தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, உப்பூர், மணக்குடி, தொண்டி, எம்.ஆர். பட்டினம், எஸ்.பி. பட்டினம் வரை சென்றார். வழியில் ஆணி அடிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட மரங்களில் உள்ள ஆணிகளை அகற்றினார்.
இது குறித்து சுபாஷ் சீனிவாசன் கூறிய தாவது:
மரங்களில் ஆணி அடிக்கும் போது காயம் ஏற்படுகிறது. அந்த மரங் களுக்கு நோய் தாக்கி விரைவில் பட்டுப்போய்விடும். அடிக்கடி பல்வேறு பகுதி களுக்கு சென்று ஆணிகளை அகற்றி வருகிறேன். இருந்த போதும் சிலர் விளம்பர பலகைகளை கட்டுவதற்காக ஆணி அடிப்பதை நிறுத்தவில்லை. மனிதாபிமானம் இல்லாமல் இச்செயலில் ஈடுபடுகிறார்கள்.
மரங்களில் ஆணி அடிப்பதால் ஏற்படும் விளைவுகளை தினமலர் நாளிதழ் அடிக்கடி சுட்டிகாட்டி செய்தி வெளியிடுகிறது. அந்த செய்திகளை பார்த்து எந்த இடம் என தெரிந்து கொண்டு அங்கு சென்று ஆணிகளை அகற்று கிறேன். ஆணிகளை அகற்றிய பின் நோய் தாக்கு தல் பரவாமல் இருக்க அந்த இடத்தில் மஞ்சள் துாள், வேப்பநார் தேய்த்து வருகிறேன் என்றார்.