/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அக்.8 ல் எஸ்.பி.பட்டினத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
/
அக்.8 ல் எஸ்.பி.பட்டினத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
அக்.8 ல் எஸ்.பி.பட்டினத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
அக்.8 ல் எஸ்.பி.பட்டினத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
ADDED : அக் 02, 2025 04:19 AM
தொண்டி, : தொண்டி அருகே உள்ள எஸ்.பி.பட்டினம் ஊராட்சிக்கு கடந்த செப்.16ல் எஸ்.பி.பட்டினம், புல்லக்கடம்பன், கலியநகரி ஆகிய ஊராட்சிகளுக்கு கலியநகரி சேவை மையத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடப்பதாக அறிவிக்கபட்டது.
எஸ்.பி.பட்டினத்தில் 2000 குடியிருப்புகள் உள்ளன. பல்வேறு பிரச்னைகளை இப்பகுதி மக்கள் சந்தித்து வருவதால் இங்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்த வேண்டும்.
இப்பகுதியை சேர்ந்த பெண்கள் 2 கி.மீ.,ல் உள்ள கலியநகரிக்கு செல்வதில் சிரமப்படுவார்கள்.
எனவே உங்களுடன் ஸ்டாலின் முகாமை எஸ்.பி.பட்டினத்தில் தனியாக நடத்த வலியுறுத்தினர். இது குறித்த செய்தி தினமலர் நாளிதழில் வெளியானது.
இதன் காரணமாக அக்.8 ல் எஸ்.பி.பட்டினம் ஊராட்சிக்கு மட்டும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுவதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
எஸ்.பி.பட்டினம் முன்னாள் மாணவர்கள் சேவை சங்கத்தினர் கூறுகையில், நடைபெற இருக்கும் முகாமில் ராமநாதபுரம் வேலைவாய்ப்பு மற்றும் அன்புக்கரங்கள் திட்ட அலுவலர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றனர்.