/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
/
பரமக்குடியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
பரமக்குடியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
பரமக்குடியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
ADDED : நவ 10, 2025 12:32 AM

பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் எஸ்.என்.வி., அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடந்தது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மூலம் நடந்த முகாமில் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். பரமக்குடி நகராட்சி தலைவர் சேது கருணாநிதி, துணை தலைவர் குணா முன்னிலை வகித்தனர்.
மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் பொற்செல்வன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுகந்தி போஸ், மாவட்ட மலேரியா அலுவலர் ரமேஷ், பூச்சியியல் வல்லுனர் பாலசுப்பிரமணியம், டாக்டர் பிரதீபா மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். ஏராளமானவர்கள் சிகிச்சை பெற்றனர்.