/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாசன் மெட்ரிக் பள்ளியில் அஸ்ட்ரானமி ஆய்வகம் துவக்கம்
/
வாசன் மெட்ரிக் பள்ளியில் அஸ்ட்ரானமி ஆய்வகம் துவக்கம்
வாசன் மெட்ரிக் பள்ளியில் அஸ்ட்ரானமி ஆய்வகம் துவக்கம்
வாசன் மெட்ரிக் பள்ளியில் அஸ்ட்ரானமி ஆய்வகம் துவக்கம்
ADDED : நவ 10, 2025 12:32 AM

பரமக்குடி: பரமக்குடி அருகே சத்திரக்குடி வாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அஸ்ட்ரானமி ஆய்வகம் துவக்க விழா நடந்தது.
பள்ளி தாளாளர் உமா தலைமை வகித்தார். மாணவர் அறிவியல் பேரவை சேர்மன் சக்திவேல் முன்னிலை வகித்தார். முதல்வர் மகாதேவன் வரவேற்றார்.
பள்ளி நிறுவனர் வாசன் ஆய்வகத்தை துவக்கி வைத்து பேசினார். தமிழக முழுவதும் 1000 அஸ்ட்ரோ ஆய்வகங்கள் தொடங்கப்பட உள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியில் முதல் ஆய்வகம் வாசன் பள்ளியில் துவக்கப்பட்டுள்ளது.
இங்கு அனைத்து பள்ளி மாணவர்களும் வாரம் ஒரு நாள் பள்ளி விடுமுறை நாளில் பங்கேற்று அறிவியல் அறிவை வளர்த்துக் கொள்ள முடியும். இதற்கு எந்த கட்டணமும் கிடையாது.
முதல் நாள் பயிற்சியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்களும் வாசன் பள்ளியில் நடக்கும் ஆய்வகத்தில் பங்கேற்று பயன் பெறலாம், என தெரிவித்தனர்.
அஸ்ட்ரோ கிளப் மாநில ஒருங்கிணைப்பாளர் சொக்கநாதன், பொருளாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் எளிதில் மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து எவ்வாறு அறிவியல் சாதனங்கள் மற்றும் மாதிரிகளை உருவாக்க முடியும் என செயல் விளக்கம் அளித்தனர். அஸ்ட்ரோ ஆய்வகம் பொறுப்பாளர்கள் சங்கீதா, ஹேமலதா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

