ADDED : ஜூன் 01, 2025 11:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட சதுரங்க களத்தின் சார்பாக, கீழக்கரை முகமதுசதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் 13 வயதிற்குட்பட்டவர்களுக்கான மாநிலஅளவிலான சதுரங்கப் போட்டி நடந்தது.
முதல் 10 இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு 20 பேருக்கு ரொக்கபரிசம் சுழல் கோப்பையும் மற்றும் சான்றிதழும் பதக்கங்களும்வழங்கப்பட்டன.
இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் தேசிய அளவில் நடைபெறும் சதுரங்கப் போட்டியில் தமிழ்நாடு சார்பாக பங்கேற்கஉள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட சதுரங்க கழகம் தலைவர் சுந்தரம், துணைத் தலைவர் தேவி உலகராஜ், துணைச் செயலாளர்கள் ஜீவா, ராஜன் மற்றும் இணைச் செயலாளர்கள் அஜீஷ் கனி, சிவா, மலை கண்ணன் மற்றும் பொருளாளர் குணசேகரன் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர் ரமேஷ் செய்திருந்தார்.