ADDED : செப் 30, 2025 03:52 AM
பெரியபட்டினம்: முத்துப்பேட்டை கவுசானல் கலை - அறிவியல் கல்லுாரியில் தமிழாய்வுத் துறை சார்பாக மாநில அளவிலான கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி முதல்வர் சூசைநாதன் தலைமை வகித்தார். செயலர் பிரான்சிஸ் முன்னிலை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்ராஜா வாழ்த்துரை வழங்கினார். தமிழ் உயராய்வு மையத் துறை தலைவர் முனியசாமி வரவேற்றார். உதவி பேராசிரியர் கோபிநாத், புலவர் அப்துல் மாலிக், உதவி பேராசிரியர் முருகேசன் பங்கேற்றனர்.
இலக்கியங்களில் பெண் விடுதலை கருத்தாக்கங்கள் என்ற தலைப்பில் ராமநாதபுரம் கம்பன் கழக நிறுவனர் ஆடிட்டர் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் பேசினர். கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை தமிழ் உயராய்வு மைய பேராசிரியர்கள் செய்தனர். தமிழ் பேராசிரியர் ராஜலட்சுமி நன்றி கூறினார்.