ADDED : செப் 18, 2026 06:31 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதுகலை ஆங்கிலத்துறை சார்பில் ‘நவீன காலத்தில் ஷேக்ஸ்பியரின் பொருத்தம்’ என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் நடந்தது.
ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் ஸ்டாலின் வரவேற்றார். முதல்வர் பாலகிருஷ்ணன் கருத்தரங்க புத்தகத்தை வெளியிட்டார். அவர் பேசுகையில், ஷேக்ஸ்பியர் எக்காலத்திற்குமான படைப்பாளி. அவரின் படைப்புகள் காலத்தால் அழியாதது என்றார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பேராசிரியர் வின்சென்ட் ராஜசேகர் பேசுகையில், இன்றைய நவீன காலத்திற்கும் பொருந்திப் போகின்ற படைப்புகளை ஷேக்ஸ்பியர் உருவாக்கியுள்ளார். அதனால் தான் அவர் இன்றும் அனைவராலும் கொண்டாடப்படும் எழுத்தாளராக உள்ளார் என்றார். பல்வேறு கல்லுாரிகளில் இருந்து பங்கேற்ற ஆங்கிலத்துறை மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். உதவிப் பேராசிரியர் சரவணன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை துறைத்தலைவர் சத்தியவதி செய்தார். –––
