UPDATED : நவ 17, 2026 07:01 PM
ADDED : நவ 17, 2026 06:57 PM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: கமுதி அருகே பேரையூர் நம்மாழ்வார் வேளாண் தொழில் நுட்ப கல்லுாரி சார்பில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, கம்பு சண்டை என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடந்தன.
இதில், ஆர்.எஸ்.மங்கலம் அருகே சோழந்துார் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவுகளில், கம்பு சண்டையில் திவ்யஸ்ரீ, கிருஷ்ண ஹாசினி முதல் பரிசும், விசாலினி 2ம் இடம், ஒற்றை கம்பு பிரிவில் மாணவி சோபனாஸ்ரீ மூன்றாமிடம் பெற்று அனைவரும் கோப்பை வென்று சாதித்துள்ளனர்.
மாணவிகளை தலைமையாசிரியர் சுரேகா, சிலம்பம் பயிற்சியாளர் தீபிகா, ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர்.––––
