/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் ஆர்ப்பாட்டம்
/
எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 07, 2025 03:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நாய்தொல்லை அதிகரித்துள்ளது. அதனை கட்டுப்படுத்த வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற
எஸ்.டி.பி.ஐ., கட்சி மேற்குமாவட்ட தலைவர் நுாரூல் அமீது கூறியதாவது: வெறிநாய்கள் தாக்குதலில் தினமும் பலர் பாதிக்கப்படுகின்றனர். இதை கண்டுகொள்ளாத மாவட்டநிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.
தமிழக அரசு அறிவித்துள்ளபடி நோய்வாய்ப்பட்ட நாய்களை கருணை கொலை செய்ய வேண்டும்.
இனப்பெருக்க தடுப்பூசி, ரேபிஸ் நோய்தடுப்பூசி இட வேண்டும் என்றார். கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.