/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கமுதக்குடியில் ரூ.1.85 கோடியில் சேமிப்பு கிடங்கு; தினமலர் செய்தி எதிரொலி

ADDED : செப் 18, 2025 06:34 AM
பரமக்குடி : பரமக்குடி அருகே கமுதக்குடியில் உள்ள தமிழ்நாடு உணவு பொருள் வாணிப கழக கிடங்கில் புதிய கட்டடங்கள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இங்கு ரேஷன் கடைக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களும் இருப்பு வைக்கப்படுகிறது. இந்நிலையில் பொருட்களை பாதுகாக்க போதுமான இடவசதி இல்லாமல் காம்பவுண்ட் சுவர் முற்றிலும் உடைந்து பாதுகாப்பற்ற நிலை நிலவியது. இது குறித்து தினமலர் நாளிதழ் தொடர்ந்து சுட்டி காட்டி வந்தது.
இதன் எதிரொலியாக 1 கோடியே 85 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 750 டன் பொருட்களை சேமித்து வைக்கும் வகையில் கூடுதல் கிடங்கு கட்டப்பட உள்ளது.
இதே போல் சுற்றுச்சுவர் மற்றும் அப்பகுதியில் ரோடு அமைக்கவும் உள்ளனர்.
இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன், பரமக்குடி தெற்கு நகர் இளைஞர் அணி அமைப்பாளர் துரைமுருகன், போகலுார் ஒன்றிய செயலாளர் குணசேகரன் மற்றும் தமிழ்நாடு அரசு நுகர் பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அருள்பிரசாத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.