ADDED : செப் 18, 2025 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி : தொண்டி பகுதியில் சில டூவீலர்களில் பச்சை கலரில் அதிக வெளிச்சத்தை உமிழும் திறன்வாய்ந்த விளக்குகள் பொருத்தப்பட்டு செல்வதால் எதிரில் வரும் மற்ற வாகனங்களில் வருபவர்களின் கண்கள் கூசும் அளவிற்கு விபத்திற்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.
வாகன ஓட்டிகள் கூறுகையில், பொதுவாக விபத்திற்கு வேகம் தான் காரணம் என்றாலும், சில நேரங்களில் அதிக வெளிச்சத்தால் விபத்துகளும் ஏற்படுகிறது. வெளிச்சத்தை குறைக்காமல் செல்வதால் தடுமாற்றம் ஏற்படுகிறது என்றனர்.