ADDED : பிப் 09, 2024 04:22 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் வட்டாரத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள வைக்கோலை கால்நடை தீவனத்திற்காக கேரளாவிற்கு கொண்டு செல்கின்றனர்.
முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் மானாவாரி பயிராக நெல் விவசாயம் செய்திருந்தனர்.
நடப்பாண்டில் பருவமழை அதிகளவு பெய்ததால் ஏராளமான கிராமங்களில் நெல் விவசாயம் முழுவதும் பாதிக்கப்பட்டது.
பயிர்கள் மழை நீரில் மூழ்கி வீணாகியது. ஏராளமான இடங்களில் நெல் மணிகளை அறுவடை செய்யாமலே விட்டுள்ளனர்.
மேலும் ஒரு சில விவசாயிகள் கூடுதல் பணம் செலவு செய்து அறுவடை வாகனம் மூலம் நெல் அறுவடை செய்தனர்.
அறுவடை வாகனத்திற்கு வாடகை கூட கொடுக்க முடியாத அளவிற்கு நெல் கிடைத்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். தற்போது வேறு வழியின்றி அறுவடை செய்யப்பட்டுள்ள நிலத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள வைக்கோல்களை கால்நடை தீவனத்திற்காக ஏராளமானோர் வாங்கி செல்கின்றனர்.
இந்நிலையில் விவசாயிகளிடம் வைக்கோல் கட்டு ரூ.40க்கும், வாகனம் மூலம் கட்டுவதற்கும் ரூ.45 செலவு செய்கின்றனர். இதனை கட்டி வைத்து கால்நடைகள் மற்றும் மற்ற பயன்பாட்டிற்காக கேரளா உள்ளிட்ட வெளி மாநிலத்திற்கு ஏற்றி செல்கின்றனர்.
வைக்கோல் வெளி மாநிலத்திற்கு கொண்டு செல்லும் போது சரக்கு வானங்களில் அதிக பாரத்துடன் ஆபத்தை உணராமல் கட்டி செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

