/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் ரிஷப வாகனத்தில் வீதி உலா; இன்று உற்சவ சாந்தி

ADDED : மே 11, 2025 06:22 AM

பரமக்குடி: பரமக்குடி ஈஸ்வரன் கோயில் சித்திரைத் திருவிழாவில் ரிஷப வாகனத்தில் சுவாமிகள் வீதி உலா வந்தனர்.
பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் சித்திரை திருவிழா துவங்கி நடந்தது. தினமும் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பஞ்ச மூர்த்திகள் உலா நடந்தது.
ஒவ்வொரு நாளும் மேள தாளங்கள், வாண வேடிக்கைகள் முழங்க விழா நடந்தது. மேலும் அம்மன் தபசு திருக்கோலம், திருக்கல்யாண வைபவம், சித்திரை தேரோட்டம் விமரிசையாக நடந்தது.
நேற்று காலை தீர்த்தவாரி நிகழ்ச்சி முடிந்து சிம்மாசனத்தில் வீதி உலா நடந்தது. மேலும் இரவு அபிஷேகம் நடந்து கொடி இறக்கப்பட்டது. இன்று உற்சவ சாந்தியுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.