/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாணவருக்கு விருது வழங்கும் விழா
/
மாணவருக்கு விருது வழங்கும் விழா
ADDED : செப் 22, 2024 03:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்குடி புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. கோல்கட்டா சேவியர் பல்கலை துணை வேந்தர் பெலிக்ஸ் ராஜ் தலைமை வகித்தார். ஆசிரியர் கருணாகரன் வரவேற்றார்.
முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், கேடயம் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியை பாக்கிய ரோசாரி, அளிந்திக்கோட்டை பள்ளி தலைமை ஆசிரியை ஜோதி, பாதிரியார்கள் டேவிட், ஜேம்ஸ் டேவிட் உட்பட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.