ADDED : ஜூலை 18, 2025 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: முதுகுளத்துார் கோவிந்தராமு மகன் தரணீஸ் காசிலிங்கம் 20. மதுரை அண்ணாநகர் தனியார் கல்லுாரி விடுதியில் தங்கி முதலாமாண்டு பிசியோதெரபிஸ்ட் படித்தார்.
இவரது நண்பர் வண்டியூர் ராஜபாண்டி 20. நேற்று முன் தினம் மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி, சிலம்பக்கோன்பட்டி உறவினர் விஜயலட்சுமி கிராமத்தில் நடந்த கோயில் விழாவில் கலந்து கொள்வதற்காக தரணீஷ் காசிலிங்கம் மற்றும் நண்பர்கள் நால்வரை ராஜபாண்டி அழைத்துச் சென்றார். தரணீஸ் காசிலிங்கம் கிணற்றில் குளித்த போது நீரில் மூழ்கி இறந்தார்.
தரணீஸ்காசிலிங்கம் மன்னர் சேதுபதிக்கு சொந்தமான கோயில்களை பராமரிக்கும் குடும்பத்தின் உறவினர்.
கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, போலீசார் தெய்வேந்திரன் விசாரிக்கின்றனர்.