/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அமிர்தா பள்ளியில் மாணவர் தலைவர்கள் பதவி ஏற்பு
/
அமிர்தா பள்ளியில் மாணவர் தலைவர்கள் பதவி ஏற்பு
ADDED : ஜூலை 15, 2025 03:25 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் அமிர்தா வித்யாலயா பள்ளியில் மாணவர்கள் சங்க தலைவர்கள் பதவி ஏற்பு விழா நடந்தது.
ராமேஸ்வரம் அருகே அரியான்குண்டில் உள்ள அமிர்தா வித்யாலயா பள்ளியில் 800க்கு மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில் மாணவர் சங்க தலைவர், துணைத் தலைவர், குழு தலைவர்கள், விளையாட்டு மற்றும் கலாச்சார குழு தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பள்ளி வளாகத்தில் பதவி ஏற்கும் விழா நடந்தது.
விழாவில் பங்கேற்ற ராமநாதபுரம் அருகே உள்ள ஐ.என்.எஸ்., கடற்படை விமான நிலைய லெப்டினன்ட் கமாண்டர் ஸ்ரீகாந்த் மாணவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து, தலைமை பொறுப்பின் பண்பு, முக்கியத்துவத்தை மாணவர்கள் உணர்ந்து சமுதாய பணியாற்ற வேண்டும் என விளக்கி பேசினார்.
விழாவில் பள்ளி முதல்வர் இந்திரா தேவி, ராமநாதபுரம் அமிர்தா பள்ளி துணை முதல்வர் தீரஜ் லட்சுமணபாரதி, ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.