/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாணவிக்கு தொல்லை: வாலிபருக்கு 3 ஆண்டு
/
மாணவிக்கு தொல்லை: வாலிபருக்கு 3 ஆண்டு
ADDED : பிப் 05, 2025 02:53 AM

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் 16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மண்டபத்தைச் சேர்ந்த ரவி மகன் பாலசந்தர் 19. இவர் 2022ல் அப்பகுதியை சேர்ந்த 16 வயது பிளஸ் 2 மாணவியை (தற்போது கல்லுாரியில் படிக்கிறார்) கடத்திச்சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். மாணவியின் பெற்றோர் புகாரில் போக்சோ சட்டத்தில் மண்டபம் போலீசார் விசாரித்து பாலசந்தரை கைது செய்தனர்.
இவ்வழக்கு ராமநாதபுரம் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் கீதா வாதிட்டார். பாலசந்தருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1500 அபராதமும் விதித்து நீதிபதி கவிதா தீர்ப்பளித்தார்.