/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காதலை ஏற்க மறுத்த மாணவி குத்திக்கொலை ராமேஸ்வரத்தில் போதை இளைஞர் கொடூரம்
/
காதலை ஏற்க மறுத்த மாணவி குத்திக்கொலை ராமேஸ்வரத்தில் போதை இளைஞர் கொடூரம்
காதலை ஏற்க மறுத்த மாணவி குத்திக்கொலை ராமேஸ்வரத்தில் போதை இளைஞர் கொடூரம்
காதலை ஏற்க மறுத்த மாணவி குத்திக்கொலை ராமேஸ்வரத்தில் போதை இளைஞர் கொடூரம்
ADDED : நவ 20, 2025 02:18 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில், ஒருதலை காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவியை போதையில் மீனவ இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் சேராங்கோட்டையை சேர்ந்தவர் மீனவர் மாரியப்பன்-. இவர் மனைவி கவிதா. இவர்களின் மூத்த மகள் ஷாலினி 17, ராமேஸ்வரத்தில் பிளஸ் 2 படித்தார்.
இதே பகுதியை சேர்ந்த மீனவர் குப்புசாமி மகன் முனியராஜ், 21. மது போதையில் சுற்றி வந்தார். ஷாலினியை ஒருதலையாக காதலித்ததாக கூறப்படுகிறது.
அந்த சிறுமி பள்ளிக்கு செல்லும் போது பின் தொடர்ந்து காதலை ஏற்கும்படி வலியுறுத்தி வந்தார். ஷாலினி அதை ஏற்கவில்லை.
நேற்று முன்தினம் இரவு ஷாலினியை கொலை செய்து விடுவேன் என அவரது தாய் கவிதாவிடம் மது போதையில் இருந்த முனியராஜ் மிரட்டல் விடுத்தார். போதையில் பேசிய அவரின் பேச்சை, கவிதா பெரிதுபடுத்தவில்லை.
இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல, பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஷாலினியை பின் தொடர்ந்த முனியராஜ் கத்தியால் அவரின் பின்கழுத்தில் குத்தி விட்டு தப்பி ஓடி துறைமுகம் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.
ரத்த வெள்ளத்தில் விழுந்த ஷாலினி, அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவத்தை கண்டித்து, ஷாலினியின் உறவினர்களும், பொது மக்களும் துறைமுகம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
பின், அரசு மருத்துவமனை முன், தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ஏ.எஸ்.பி., மீரா, ஏ.டி.எஸ்.பி., பாலச்சந்திரன், நகராட்சி தலைவர் நாசர்கான் உள்ளிட்டோர் மறியல் செய்தவர்களை சமாதானம் செய்தனர்.
முனியராஜை, விசாரணைக்கு பின், போலீசார் சிறையில் அடைத்தனர்.

