/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பஸ் படிக்கட்டில் மாணவர் பயணம்; பலிக்கு பிறகு தான் நடவடிக்கையா
/
பஸ் படிக்கட்டில் மாணவர் பயணம்; பலிக்கு பிறகு தான் நடவடிக்கையா
பஸ் படிக்கட்டில் மாணவர் பயணம்; பலிக்கு பிறகு தான் நடவடிக்கையா
பஸ் படிக்கட்டில் மாணவர் பயணம்; பலிக்கு பிறகு தான் நடவடிக்கையா
ADDED : பிப் 22, 2024 11:23 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் அரசு பஸ்களில் தினமும் படிக்கட்டில் மாணவர்கள் பயணம் செய்கின்றனர். இதனை ஏனோ அதிகாரிகள் கண்டும் காணாதது போல் உள்ளனர். பலிக்கு பிறகு தான் நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வி எழுகிறது.
ராமநாதபுரம் பகுதியில் பள்ளி, கல்லுாரி, அலுவலகம் திறப்பு, முடியும் நேரத்தில் போதிய பஸ்கள்இல்லாததால் உயிருக்கு ஆபத்தான முறையில் மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வது வாடிக்கையாகியுள்ளது.
ராமநாதபுரத்திற்கு நகர் மட்டுமின்றி, கிராமங்களிலிருந்து கல்லுாரி, பள்ளிகளில் படிக்க பல ஆயிரம் மாணவர்கள் ராமநாதபுரம் வந்து செல்கின்றனர்.
இவர்களின் கூட்டத்திற்கு ஏற்ப பஸ் போக்குவரத்து வசதி இல்லை. இதனால் பள்ளி, கல்லுாரி, அலுவலக நேரங்களில் காலை, மாலையில் ஆபத்தை உணராமல் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர்.
நடுரோட்டில் நின்ற பஸ்
நேற்று 9பி என்ற டவுன் பஸ்சில் இருபுற படிக்கட்டுகளிலும் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்தனர். உள்ளே நெரிசல்காரணமாக குழந்தையுடன் வந்த பெண் பயணி அலறினார். இதையடுத்து மதுரை ரோட்டில் ராஜாபள்ளி மைதானம் அருகே பஸ்சை நிறுத்தி அவர்கள் இறக்கி விட்டனர்.
அதன் பிறகு படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்தனர். விபத்திற்கு பிறகு தான் நடவடிக்கை எடுப்பார்களா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இவ்விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் போக்குவரத்து துறையினர், போலீசார் மாணவர்களை உயிரைக் காக்க முன்வரவேண்டும். அதற்கு கலெக்டர் விஷ்ணுசந்திரன், எஸ்.பி., சந்தீஷ் உத்தரவிட வேண்டும்.