/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விபத்து அபாயத்தை உணராமல் ரோட்டை கடக்கும் மாணவிகள்
/
விபத்து அபாயத்தை உணராமல் ரோட்டை கடக்கும் மாணவிகள்
ADDED : பிப் 21, 2025 06:55 AM

திருவாடானை: திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு கலைக்கல்லுாரி மாணவிகள் ஆபத்தான முறையில் ரோட்டை கடக்கின்றனர்.
திருவாடானையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு கலைக் கலைக்கல்லுாரி அருகருகே உள்ளது. இங்கு படிக்கும் தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், சனவேலி மங்களக்குடி, எஸ்.பி.பட்டினம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் பேரிகார்டு இல்லாததால் கனரக வாகனங்கள் வேகமாக செல்கின்றன. கட்டுப்பாடு இல்லாமல் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. விபத்தை தடுக்கும் வகையில் ரோட்டில் போலீசார் பேரிகார்டு வைத்தனர்.
ஆனால் இரவு நேரங்களில் அந்த பேரிகார்டை சில சமூக விரோதிகள் எடுத்து அருகில் உள்ள கண்மாயக்குள் வீசினர். தற்போது அந்த இடத்தில் பேரிகார்டு இல்லாததால் கல்லுாரி முடிந்து வீடு செல்லும் மாணவிகள் அவசரமாக ரோட்டை கடக்க முயலும் போது விபத்து அபாயம் உள்ளது.
போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இருந்த போதும் மீண்டும் பேரிகார்டு வைத்து, அதை எடுப்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

