/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாநில போட்டிக்கு மாணவிகள் தேர்வு
/
மாநில போட்டிக்கு மாணவிகள் தேர்வு
ADDED : நவ 28, 2024 05:12 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் மாணவிகள் தஜுலா ஹஸனத், ஹாஜி ஹப்சின் ஆகியோர் மாநில அளவிலான இறகு பந்து போட்டிக்கு தகுதி பெற்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட அளவிலான இறகுப் பந்து போட்டியில் மாவட்டத்தில் இருந்து பரமக்குடி, முதுகுளத்துார் உட்பட 8 குறு வட்டார அளவிலான போட்டியில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் முதுகுளத்துார் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவி தஜுலா ஹஸனத் 19 வயதிற்கு உட்பட்ட ஒற்றையர் பிரிவில் முதலிடம், இரட்டையர் பிரிவில் ஹாஜி ஹப்சின், தஜுலா ஹஸனத் முதல்இடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் முகமது உசேன், கமால் பாட்சா, தமீமுல் அன்சாரி, மாணவிகள் தஜுலா ஹஸனத்,ஹாஜி ஹப்சின் ஆகியோரை தாளாளர் சாகுல் ஹமீது, கல்விக் குழு தலைவர் செய்யது மூமின், தலைமையாசிரியர் காஜா நிஜாமுதீன் குரைஷி, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.