நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி புது நகரில் இயங்கும் டாக்டர் அப்துல் கலாம் பப்ளிக் பள்ளி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் கலை பண்பாட்டு பயிற்சியாளர்கள் நல சங்கம் சார்பில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. ராமநாதபுரத்தில் நடந்த இப் போட்டிகளில் பரமக்குடி டாக்டர் அப்துல் கலாம் பப்ளிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில் 15 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். இவர்களை பள்ளி தாளாளர் முகைதீன் முசாபர் அலி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.