/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிரிக்கெட் போட்டி மாணவர்கள் வெற்றி
/
கிரிக்கெட் போட்டி மாணவர்கள் வெற்றி
ADDED : ஆக 28, 2025 11:19 PM

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே ஆர்.எஸ்.மடை அமிர்த வித்யாலயம் சி.பி.எஸ்.இ., பள்ளியில் பயிலும் அணி வீரர்கள், முதல்வர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டனர்.
நாற்பதுக்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டு தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினர். இதில் அமிர்த வித்யாலயம் சி.பி.எஸ்.சி., பள்ளி மாணவர்கள் இறுதி போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாவது பரிசையும், ரூ.30,000 ரொக்கத் தொகை பெற்றனர்.
சிறப்பாக விளையாடிய பள்ளியின் கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் விளையாட்டு ஆசிரியர்கள் சர்மா, பேபி ஷாலினி ஆகியோரை பள்ளி மேலாளர் பிரம்மச்சாரிணி லட்சுமி அம்மா, முதல்வர் கோகிலா, பள்ளி துணை முதல்வர் தீரஜ் லட்சுமண பாரதி ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.