UPDATED : அக் 20, 2026 07:10 PM
ADDED : அக் 20, 2026 07:06 PM
அ நிறம் | அளவு
பரமக்குடி: பரமக்குடி மாணவர்கள் மாநில அளவிலான குராஷ் போட்டியில் வெற்றி பெற்று தேசிய போட்டிக்கு தேர்வாகினர்.
திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடியில் மாநில அளவிலான குராஸ் தேர்வு போட்டிகள் நடந்தது. இதில் ராமநாதபுரம் அணிக்காக பரமக்குடி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 36, 45, 48, 52, 55 மற்றும் 63 கிலோ பிரிவுகளில் முறையே நிவேதா, பவித்ரன், அபிநயஸ்ரீ, பால நாகேஸ்வரி, திஷா, முகிலரசன் உள்ளிட்டோர் உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடக்க உள்ள தேசிய போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர். பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.
