/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அனுமதியின்றி மீன்பிடிப்பில் ஈடுபட்ட 160 படகுகளுக்கு மானிய டீசல் ரத்து

ADDED : நவ 06, 2025 01:12 AM
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் அனுமதியின்றி மீன்பிடிக்கச் சென்ற 160 படகுகளுக்கு மீன்வளத்துறையினர் மானிய டீசலை ரத்து செய்து அபராதம் விதித்தனர்.
பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடிக்கச் செல்லும் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மீன்வளத்துறை வழங்கும் அனுமதி டோக்கன் பெற்று செல்வது வழக்கம். ஆனால் நவ., 1ல் ராமேஸ்வரம் மீனவர்கள் அனுமதி டோக்கன் பெறாமல் அதிகாலை 5:00 மணிக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இதுகுறித்து விசாரித்த ராமேஸ்வரம் மீன் துறை உதவி இயக்குனர் தமிழ்மாறன், அனுமதியின்றி மீன்பிடிக்க சென்ற 160 படகுகளுக்கு நேற்று முதல் மானிய டீசல் வழங்குவதை ரத்து செய்தும், இப்படகுகளுக்கு அபராதம் விதிக்க ராமநாதபுரம் மீன்துறை துணை இயக்குனருக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து படகிற்கு தலா ரூ. 5000 முதல் ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளது.