/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாவட்ட அளவில் பூப்பந்து போட்டி: கமுதி சத்திரிய நாடார் பள்ளி வெற்றி
/
மாவட்ட அளவில் பூப்பந்து போட்டி: கமுதி சத்திரிய நாடார் பள்ளி வெற்றி
மாவட்ட அளவில் பூப்பந்து போட்டி: கமுதி சத்திரிய நாடார் பள்ளி வெற்றி
மாவட்ட அளவில் பூப்பந்து போட்டி: கமுதி சத்திரிய நாடார் பள்ளி வெற்றி
ADDED : நவ 05, 2025 09:14 PM

உத்திரகோசமங்கை: மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த இரண்டு மாதமாக உத்தரகோசமங்கை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்து வருகிறது. குறு வட்டார அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்கள் இப்போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
நேற்று பூப்பந்து போட்டியில் 24 பள்ளிகளைச் சேர்ந்த அணி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். 14 மற்றும் 19 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் கமுதி சத்திரிய நாடார் மேல்நிலைப்பள்ளி முதலிடம், 17 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் கமுதி சத்திரிய நாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்து சாதனை படைத்தது. வெற்றி பெற்ற அணியினர் மாநில அளவிலான போட்டிக்கு வயது பிரிவின் அடிப்படையில் பல்வேறு மாவட்டங்களில் நடக்கக்கூடிய போட்டியில் பங்கேற்கின்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் வேணி ரத்தினம், பட்டதாரி ஆசிரியர் முத்தரசு, ராமானுஜம், உடற்கல்வி ஆசிரியர்கள் சலீம், முத்து முருகன், சேவியர், பன்னீர்செல்வம், அருணாச்சலம், நாகநாதன் உள்ளிட்டோர் பாராட்டினர். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ், மகாலிங்கம் செய்திருந்தனர். மாணவிகளுக்கான பூப்பந்தாட்ட போட்டி (இன்று) உத்தரகோசமங்கை அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடக்கிறது.

