ADDED : நவ 05, 2025 09:13 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் மின்னணுவியல், தகவல் தொடர்பு துறை, பயோ மெடிக்கல் துறை மற்றும் யாத்ரோனிக்ஸ் நிறுவனம் ஆகியோர் இணைந்து இரண்டு நாட்கள் நடத்திய தொழில் நுட்ப பயிற்சி பட்டறைகருத்தரங்கு நடந்தது.
முதல்வர் பெரியசாமி கருத்தரங்கை துவக்கி வைத்தார்.
மின்னணுவியல் துறை பேராசிரியர் வளனரசி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக யாத்ரோனிக்ஸ் நிறுவனம் நிர்வாகிகள் யோகேஸ்வரன், வினோத் பங்கேற்றனர். முதல்வர் பெரியசாமி பேசியதாவது:
ஏஐ தொழில் நுட்ப வளர்ச்சியானது அனைத்து வேலைகளையும் விரைந்து முடிக்கக் கூடிய வகையில் வளர்ச்சி அடைந்து வருகிறது.
நாமும் கையாளும் வகையில் கல்வித் தரம், தொழில் நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
கல்லுாரி துறைத்தலைவர்கள் மின்னணுவியல் துறை மகேந்திரன், பயோ மெடிக்கல் துறை முருகேஸ்வரி ஆகியோர் வாழ்த்துறை வழங்கினர். மாணவர்கள் பங்கேற்றனர்.

