/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
3 வது நாளாக உயிருக்கு போராடும் முதியவர்
/
3 வது நாளாக உயிருக்கு போராடும் முதியவர்
ADDED : நவ 05, 2025 09:13 PM
திருவாடானை: திருவாடானை அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில் 3 வது நாளாக முதியவர் ஒருவர் உயிருக்கு பேராடிக்கொண்டிருக்கிறார். உறவினர்கள் கண்டுகொள்ளவில்லை. திருவாடானை தாலுகா அலுவலகம் எதிரில் அரசு மருத்துவமனை உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக 80 வயதான முதியவர் மருத்துவமனை நுழைவு வாயிலில் படுத்திருக்கிறார். யார் இவர், எந்த ஊர் என்ற விபரம் தெரியாமல் இருந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக திருவாடானை போலீசார் விசாரணை செய்து பாண்டுகுடியை சேர்ந்த முதியவரின் உறவினர்களுக்கு தெரிவித்தனர். ஆனால் நேற்று மாலை வரை அவரை உறவினர்கள் அழைத்துச் செல்லவில்லை. சட்டை இல்லாமல் வெறும் உடம்புடன் வெயிலில் படுத்திருக்கும் அந்த முதியவர் உயிருக்கு போராடி வருகிறார்.

