/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாக்காளர் பதிவு சிறப்பு தீவிர திருத்தம் துவக்கம்
/
வாக்காளர் பதிவு சிறப்பு தீவிர திருத்தம் துவக்கம்
ADDED : நவ 05, 2025 09:13 PM
திருவாடானை: திருவாடானை சட்டசபை தொகுதியில் நேற்று முன்தினம் வாக்காளர் பதிவு சிறப்பு தீவிர திருத்த பணிகள் வீடு, வீடாக சென்று நடத்தப்படுகிறது. திருவாடானை தொகுதி வாக்காளர் உதவி பதிவு அலுவலர் ஆண்டி கூறியதாவது:
ஓட்டுச்சாவடி அலுவலர்கள் அலைபேசி ஆப் மூலம் வீடு, வீடாக சென்று வாக்காளர்கள் இருப்பு தன்மையை கணக்கெடுத்து வருகின்றனர். மாதத்திற்கு 3 முறை ஒரு குடும்பத்திற்கு சென்று ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வாக்காளர்களை சந்தித்து உண்மை விபரங்களை சேகரிப்பார்கள். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் மறுப்பு விபரங்களை தெரிவிக்கலாம் மேலும் விபரங்களுக்கு அலைபேசி எண் 94450 00655 தொடர்பு கொள்ளலாம் என்றார்.

