/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வீடுகளில் சோலார் பேனல் அமைப்பதற்கு மானியம்
/
வீடுகளில் சோலார் பேனல் அமைப்பதற்கு மானியம்
ADDED : அக் 09, 2025 05:17 AM
ராமநாதபுரம் : பிரதமரின் சூரிய வீடு மின்சார திட்டத்தில் வீடுகளில் சோலார் பேனல் அமைப்பதற்கான மானியம் பெறுவது குறித்த விழிப்புணர்வு முகாம்ராமநாதபுரத்தில் நடந்தது. ராமநாத புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் வெண்ணிலா கூறியதாவது:
சோலார் பேனல் அமைப்பதால் வீட்டிற்கான மின்சார தேவையை பூர்த்தி செய்துக் கொள்ள முடியும். மத்திய அரசு திட்டத்தில் 2022 முதல் வீடுகளுக்கு மானிய விலையில் சோலார் பேனல் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.
ஒரு கிலோவாட் சோலார் பேனல் அமைக்க ரூ.30 ஆயிரம், 2 கிலோவாட்டிற்கு ரூ.60 ஆயிரம், 3 கிலோவாட்டிற்கு மேல் ரூ.78 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.
மாதம் 500 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் உபயோகிக்கும் குடும்பங்கள் ரூ.1250 வரை மின் கட்டணத்தில் சேமிக்க முடியும். மின் கட்டண ரசீது வைத்திருப்போர் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 250க்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர் என்றார்.
மின்வாரிய செயற்பொறியாளர்கள் குமரவேல், பட்டுராஜா, மின்சாரத்துறை அலுவலர்கள், சோலார் பேனல் நிறுவனர்கள் கலந்து கொண்டனர்.