/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி விழா
/
முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி விழா
ADDED : அக் 09, 2025 05:17 AM

சிக்கல் : சிக்கல் வடக்கு தெரு முத்து மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி விழா பத்து நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நாள் தோறும் அம்மன் சக்தி கரகத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் இரவில் முளைப்பாரி ஊர்வலம் தெருக்களில் உலா வந்தது. நேற்று காலை பெண்கள் பொங்கல் வைத்தனர்.
தொடர்ந்து பத்து நாட்களும் இரவில் பெண்களின் கும்மியாட்டம், ஆண்களின் ஒயிலாட்டம் நடந்தது. நேற்று மாலை அம்மன் சக்தி கரகம் முன்னே செல்ல ஏராளமான பெண்கள் முளைப்பாரி சுமந்தவாறு ஊர்வலமாக சென்றனர். சிக்கல் கண்மாயில் பாரி கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை சிக்கல் வடக்கு தெரு கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.