/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் குருசடை தீவில் மாணவிகள் துாய்மைப்பணி
/
பாம்பன் குருசடை தீவில் மாணவிகள் துாய்மைப்பணி
ADDED : அக் 09, 2025 05:18 AM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பன் குருசடை தீவில் அன்னை ஸ்கொலாஸ்டிகா கல்லுாரி மாணவிகள் துாய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
தேசிய வன உயிரின பாதுகாப்பு வார விழாவையொட்டி பாம்பனில் உள்ள அன்னை ஸ்கொலாஸ்டிகா கல்லுாரி மாணவிகள் மன்னார் வளைகுடா கடலில் உள்ள குருசடை தீவுக்கு சென்று துாய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
கடலோரத்தில் கிடந்த பிளாஸ்டிக் பைகள், கழிவு வலைகளை மாணவிகள் சேகரித்த னர்.
பின் மன்னார் வளைகுடா உயிர்கோள உயிரினங்களின் பாதுகாப்பு குறித்து மண்டபம் வன அலுவலர்கள் சாமிநாதன், மணிகண்டன் ஆகியோர் மாணவிகளிடம் விளக்கி பேசினார்கள்.
ஏற்பாடுகளை தங்கச்சிமடம் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் ஜான்போஸ், நிர்வாகி பாண்டி, கல்லுாரி விரிவுரையாளர்கள் செய்திருந்தனர்.