/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தென்னை, பழப்பயிர் சாகுபடிக்கு தேசிய தோட்டக்கலையில் மானியம்
/
தென்னை, பழப்பயிர் சாகுபடிக்கு தேசிய தோட்டக்கலையில் மானியம்
தென்னை, பழப்பயிர் சாகுபடிக்கு தேசிய தோட்டக்கலையில் மானியம்
தென்னை, பழப்பயிர் சாகுபடிக்கு தேசிய தோட்டக்கலையில் மானியம்
ADDED : ஜன 17, 2024 12:29 AM
ராமநாதபுரம்: தேசிய தோட்டக்கலை வாரியத்தில், தென்னை, பழப்பயிர்கள் சாகுபடிக்கு அதிகப் பட்சமாக ரூ.30 லட்சம் வரை விவசாயிகள் மானியம் பெறலாம்.
ராமநாதபுரத்தில் தேசிய தோட்டக்கலை வாரிய துணை இயக்குனர் ராஜா கூறியதாவது: மத்தியரசின் வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய தோட்டக்கலை வாரியம் நாட்டில் உள்ள தோட்டக்கலை விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தைஈட்டும் வகையிலும் பல்வேறு திட்டங்களை வழங்குகிறது.
தமிழக பெரிய விவசாயிகள், தொழில் முனைவோர்கள், தனியார் நிறுவன உரிமையாளர் ஆகியோர் தோட்டக்கலை பயிர் உற்பத்தி மற்றும் அறுவடைக்கு பின்னர் மேலாண்மை வணிகத் தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். இதற்கு குறைந்து 5 முதல் 50 ஏக்கர் வரை தென்னை, பழப் பயிர்களை சாகுபடி செய்து, திட்ட மதிப்பில் 40 சதவீதம் அல்லது அதிகப்பட்சமாக ரூ.30லட்சம் வரை மானியம் பெறலாம்.
நில ஆவணங்கள் பட்டா, வில்லங்க சான்று விண்ணப்பம் செய்பவரின் பெயரில் இருக்கவேண்டும். ஏற்கனவே பயிரிட்ட பழ பயிர்களுக்கு மானியம் கிடையாது.முதலில் வங்கி அனுமதி கடிதம் பெற வேண்டும் பின்னர் தேசிய தோட்டக்கலை வாரியத்தின் இணையத்தில் அனுமதி சான்றுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இத்திட்டத்தில் வாழை, தென்னை, மா, நெல்லி, எலுமிச்சை, கொய்யா, திராட்சை, சீதாபழம், அன்னாசி, சப்போட்டா, பப்பாளி, மாதுளை, முந்திரி, புளி, பலா முதலிய தோட்டக்கலை பயிர்களை புதியதாக சாகுபடி செய்து பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு 044--2250 0965 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

