ADDED : ஆக 08, 2025 03:02 AM

ராமநாதபுரம்: மாணவர்கள் லட்சியத்தோடு விடா முயற்சியுடன் படித்தால் தேர்வுகளில் வெற்றி பெற்று மாதம் ரூ.10 லட்சம் வரை சம் பாதிக்கலாம் என சென்னை ஐ.ஐ.டி.,-எம் திட்டத் தலைவர் ஹரிகிருஷ்ணன் தெரிவித்தார்.
அனைவருக்கும் 'ஐ.ஐ.டி.,--எம்' திட்டத்தில் வழங்கப்படும் ஆன்-லைன் படிப்புகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு திட்டத் தலைவர் ஹரி கிருஷ்ணன் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
ராமநாதபுரம் வந்த ஹரிகிருஷ்ணன் ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் படித்த வகுப்பறை, பள்ளி வளாகத்தை பார்வை யிட்டார். அதன்பிறகு திட்டத் தலைவர் ஹரி கிருஷ்ணன் மாணவர் களிடம் கேள்விகள் கேட்டு கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது:
அப்துல் கலாம் படித்த வகுப்பறையில் உங்களை சந்திப்பது மிக்க மகிழ்ச்சி. அவரை போல மாணவர் களாகிய நீங்களும் சாதிக்க வேண்டும். நாடு முழுவதும் 23 ஐ.ஐ.டி.,கள் (இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள்) உள்ளன. ஜே.இ.இ., நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இங்கு படிக்கலாம்.
இத்தேர்வை ஆண்டுதோறும் 14 லட்சம் பேர் எழுதுகின்றனர். ஆனால் 16 ஆயிரம் சீட் மட்டுமே உள்ளது. 4 ஆண்டுகள் படிக்கும் போதே மூன்றாம் ஆண்டில் கேம்பஸ் இன்டர்யூ மூலம் ஆட்களை தேர்வு செய்து குறைந்தது ஆண்டுக்கு ரூ.6.25 லட்சம் முதல் ரூ.1.25 கோடி சம் பளம் பெறுகின்றனர். அதுவும் படிக்கும் போதே 6 மாதம் சம்பளம் நிறுவனத்தினர் வழங்குகின்றனர்.
பணக்கார பசங்க மட்டுமே ஐ.ஐ.டி.,யில் சேர்ந்து மேலும் பணம் சேர்க்கின்றனர். ஏழை, எளிய மாணவர்களும் படிக்க வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். எனவே அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் லட்சியத்தோடு படிக்க வேண்டும். சந்தேகங்களை கேட்டு தெளிவுபெற வேண்டும். நமக்கு ஏன் வம்பு என இருந்துவிடக் கூடாது. மாணவர்கள் லட்சியத்தோடு, விடா முயற்சியுடன் படித்தால் நீங்களும் நிறைய சாதிக்கலாம் என்றார்.
ராமநாதபுரம் ஜாஸ் கல்வி நிறுவன முதல்வர் முகமது சலாவுதீன், சி.எஸ்.ஐ., கல்வியியல் கல்லுாரி முதல்வர் ஆனந்த், பள்ளி தலைமை யாசிரியர் ஞானலெட் சொர்ணகுமாரி ஆகியோர் பங்கேற்றனர்.

