/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கரும்பு விலை உயர்வு ரூ.80க்கு விற்பனை
/
கரும்பு விலை உயர்வு ரூ.80க்கு விற்பனை
ADDED : ஜன 13, 2025 06:07 AM
ஆர்.எஸ்.மங்கலம், : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு விலை உயர்ந்து ஒரு கரும்பு ரூ.80க்கு விற்பனை செய்வதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகையில் வீடுகள் தோறும் முக்கிய பங்கு வகிப்பது கரும்பு. இதனால் பொதுமக்கள் புதுமணத் தம்பதியினருக்கு சீர் கொடுப்பதற்கும், வீடுகளுக்கும் அதிகளவில் கரும்புகளை வாங்கிச் செல்வர்.
இந்நிலையில் ஆர். எஸ்.மங்கலம், தேவிபட்டினம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.700 முதல் ரூ.800க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
சில்லரையில் ஒரு கரும்பு ரூ 80 க்கு விற்பனை ஆகிறது. கடந்த ஆண்டை விட ஒரு கட்டு கரும்பு ரூ.300 வரை விலை உயர்ந்துள்ளது. இதுகுறித்து கரும்பு வியாபாரிகள் கூறுகையில், நடப்பு ஆண்டில் பெரும்பாலான பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கரும்புகள் கடைசி நேர தொடர் மழை உள்ளிட்ட சீதோஷ்ண நிலையால் அதிக வளர்ச்சி இன்றியும், பருமன் இன்றியும் மகசூல் குறைந்துள்ளது.
இதனால், தங்களுக்கு கொள்முதல் விலையும் கட்டிற்கு ரூ.200 முதல் ரூ.300 வரை கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதால் விலை உயர்ந்துள்ளது என்றனர். இருப்பினும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கரும்புகளை வாங்கிச் செல்கின்றனர் என்றனர்.